ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் பெறும் திட்டத்தில் விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும்
கயத்தாறு வட்டாரத்தில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் பெறும் திட்டத்தில் பயனடையும் விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரி அறிவுறுத்தி உள்ளார்.
கயத்தாறு:
கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, வட்டாரத்திலுள்ள விவசாயிகள் பயிர் செய்யப்படும் இடங்களுக்கு வரும் நிதியாண்டுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதியில் ஆண்டுக்கு ரூ,6 ஆயிரம் பெறும் திட்டத்தில் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிதியுதவி பெற்ற விவசாயிகள் இந்த ஆண்டுக்கு தங்களது பதிவை புதுப்பிக்க வேண்டும். இதற்கு தங்க வங்கிக் கணக்கு எண், மொபைல் எண், ஆதார் எண், ஆகியவற்றை அருகில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது அருகில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம், மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு கயத்தாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், கழுகுமலை, கடம்பூரில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் அணுகி தெரிந்து கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.