குழந்தைகளுக்கு ஆதரவு உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது

குழந்தைகளுக்கு ஆதரவு உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது.

Update: 2022-09-11 18:07 GMT

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் வாயிலாக தாய், தந்தை அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வீதம் நிதி ஆதரவு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானச்சான்று உச்ச வரம்பு ரூ.24 ஆயிரத்தில் இருந்து தற்போது ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே நிதி ஆதரவு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருமானச்சான்று ரூ.72 ஆயிரத்துக்குள் பெறப்பட்டு, அதனுடன் குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2-வது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர்- 621704 என்ற முகவரிக்கு மனு அனுப்பலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்