அண்ணாமலை வெளியிடுவது சொத்து பட்டியலே தவிர ஊழல் பட்டியல் இல்லை - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

அண்ணாமலை வெளியிடுவது சொத்து பட்டியலே தவிர ஊழல் பட்டியல் இல்லை என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

Update: 2023-07-26 10:55 GMT

திருப்பூர்,

தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

திருப்பூர் மாநகரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் திருப்பூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக 1,135 முகாம்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாட்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 108 பேர் பூர்த்தி செய்து அதனை முகாம்களில் வழங்கி உள்ளனர்.

அப்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. பைல்ஸ்-2 வெளியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அண்ணாமலை தி.மு.க. வினரின் சொத்து பட்டியலைத்தான் வெளியிடுகிறாரே தவிர, ஊழல் பட்டியல் இல்லை. எனினும் அதனை சட்டப்படி சந்திப்போம் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்