அரசியல் சாயம் பூசுவதை அண்ணாமலை வாடிக்கையாக கொண்டுள்ளார் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள்-காவலாளிகள் இடையே நடந்த மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

Update: 2023-12-13 05:13 GMT

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மூலஸ்தானம் முன்பு ஆந்திர பக்தர்கள், கோவில் காவலாளிகள் இடையே நேற்று திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆந்திராவை சேர்ந்த சென்னாராவ், சந்தாராவ் சந்தா, கட்டா ராமு என்ற 3 பேர் காயம் அடைந்தனர். அதில் ஒருவருக்கு மூக்கு உடைந்து, ரத்தம் வழிந்தது. மேலும் 3 காவலாளிகளுக்கும் காயம் ஏற்பட்டது. மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர் தாக்கப்பட்ட சம்பவம், பக்தருக்கும் - காவலாளிகளுக்கும் இடையே நடைபெற்ற பிரச்சினை; எல்லாவற்றையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதா?. நேற்றே பக்தர்கள், காவலாளிகள், அர்ச்சகர்களை அழைத்து பேசி சுமூக தீர்வு எட்டப்பட்டுவிட்டது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக நடக்கும் பிரச்சினைகளுக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியல் சாயம் பூசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். மழை பாதிப்பை வைத்து அரசியல் செய்யலாம் என நினைத்தார் அது நடக்கவில்லை என்பதால் தற்போது ஸ்ரீரங்கம் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். இவ்வாறு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்