அங்கித் திவாரி ஜாமீன் மனு - சுப்ரீம் கோர்ட்டில் 16ம் தேதி விசாரணை
அங்கித் திவாரி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்
சென்னை,
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் அங்கித் திவாரியின் ஜாமீன் மனு திண்டுக்கல் நீதிமன்றத்தில் 2 முறை தள்ளுபடியானது. ஐகோர்ட்டும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என அறிவித்ததுடன், வழக்கு விசாரணையை வரும் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி, உத்தரவிட்டார்.
இந்த நிலையில் , அங்கித் திவாரி ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். ஜாமின் மனுவை வரும் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட்டின் இருநீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது.