அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தூத்துக்குடி,
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2001-2006 அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4 கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
வழக்கில் 80 சதவிகிதம் விசாரணை முடிந்த நிலையில் தங்களையும் இணைக்க கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை நவம்பர் 10-ம் தேதிக்கு (இன்று) தூத்துக்குடி நீதிமன்றம் ஒத்திவைத்தது. அதன்படி, அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை டிசம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.