அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்

அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-19 13:04 GMT


அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சங்க மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாநாடு

குடியாத்தத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவி யாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் வேலுார் மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு வேலூர் மாவட்ட தலைவர் செல்வநாயகி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மகாலட்சுமி வரவேற்றார். கவுரவத் தலைவர் ஜெம்மா டிசில்வா, தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை செயலாளர் சுப்பிரமணியன், அமைப்பு செயலாளர் வேலுசாமி ஆகியோர் பேசினர்.

இதில் மாநில தலைவர் பத்மம்மா, துணைத் தலைவர் மரியம்மா, மாநில பிரசார செயலாளர் விஜயா, மாநில பொருளாளர் கோமளாதேவி, மாவட்ட அமைப்பு செயலாளர் உமா, வேலுார் மாவட்ட பொருளாளர் லோகநாயகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிரந்தரம் செய்ய வேண்டும்

கூட்டத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் வரையறுக்கப்பட்ட வேலைநேரம் காலை 8.30 மணி முதல் 4 மணி வரை என்று உள்ளது. இருப்பினும் கலெக்டரால் அவ்வப்போது சுட் டிக்காட்டப்படுகின்ற பிற துறைகளைச் சேர்ந்த பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இவ்வளவு உழைப்பை கொடுக்கும் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களது பணி இதுவரை நிரந்தரப்படுத்தப்படவில்லை. அனைவரும் பகுதிநேர அரசுப் பணியாளர்களாக இருக்கிறோம். எனவே அங்கன்வாடி ஊழியர்களை நிரந்தரப்பணியாளர்களாக அறிவித்து 2 காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடை தொகையை உயர்த்தி பணி யாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பது உள்பட 15 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முடிவில் மாநில பொதுச்செயலாளர் நளினி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்