ரூ.12 லட்சத்தில் அங்கன் வாடி கட்டிடம்
ரூ.12 லட்சத்தில் அங்கன் வாடி கட்டிடம் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட காக்கங்கரை ஊராட்சியில் அங்கன்வாடி கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கினார். அதைத்தொடர்ந்து காக்கங்கரையில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை போட்டு கட்டிடம் கட்டும் பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் தலைமை குழு உறுப்பினர் கு.ராஜமாணிக்கம், கந்திலி ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் மோகன், ஒன்றிய குழு உறுப்பினர் சர்க்கரை, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.