மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி ஆந்திர சிறுமி மாயம்
மெரினா கடலில் குளித்தபோது அலையில் சிக்கி மாயமான ஆந்திர சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்
ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் வைஷ்னவி (வயது 10). வெங்கடேஷ் தனது குடும்பத்தினரோடு சென்னை ஆவடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருகிறார். இந்தநிலையில் இன்று மெரினா கடற்கரைக்கு சென்ற வெங்கடேஷ் தனது உறவினர்களுடன் கடலில் குளித்தார்.
அப்போது அவரது மகள் வைஷ்னவி மற்றும் உறவினர்களான அரிகிருஷணன், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் கடல் அலை உள்ளே இழுத்து சென்றது. கடலில் தத்தளித்த அரிகிருஷ்ணன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் அங்கு பணியில் இருந்த போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். வைஷ்ணவி மட்டும் கடல் அலை இழுத்துசென்றது, அவரை மீட்க முடிய வில்லை. தற்போது அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.