இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி

மயிலம் அருகே சித்தணியில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் அஞ்சலி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Update: 2022-09-18 18:45 GMT

மயிலம்

மயிலம் அருகே உள்ள சித்திணி கிராமத்தில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர்த்தியாகம் செய்த சித்தணி ஏழுமலையின் 35-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு நினைவு சின்னம் அருகே சங்க கொடியை ஏற்றி மலர் வளையம் வைத்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழுமலையின் குடும்பத்துக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஆலோசனை குழு தலைவர் பேராசிரியர் தீரன், பா.ம.க. இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் செங்கேணி, ஜானகிராமன், நெடிசேட்டு, நந்தகோபால், பாலு, சண்முகம், அய்யனார், சக்திவேல், மின்னல் மணி, சிலம்பரசன், ராஜு, தனசேகர், ஜீவா, பூங்காவனம், ஆட்டோ தேசிங்கு, தீனா, பிரபு செல்வம், பாபு, அலாவுதீன், சதீஷ், வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்