தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2024-02-18 14:27 IST

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சட்டப்பேரவை உறுப்பினர் கே.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டிருப்பதற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்