குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

வில்லுக்குறி அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி சாவு

Update: 2022-07-02 14:47 GMT

திங்கள்சந்தை,

வில்லுக்குறி அருகே குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவருடைய மனைவி செல்லதங்கம் (வயது 65). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள ஊத்துக்குளி குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை கவனித்த இளைஞர்கள் அவரை மீட்டனர். பின்னர் ஆட்டோ மூலம் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், செல்லதங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து செல்லதங்கம் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இதுதொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்