முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நீடாமங்கலம்:
தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து நேற்று விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து தஞ்சை வழியாக நீடாமங்கலம் அருகே உள்ள கோவில்வெண்ணிக்கு நேற்று மாலை 6.20 மணிக்கு வந்தார். அங்கு முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் அமைச்சர் சக்கரபாணி, கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மற்றும் தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.