தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து சாவு

கங்கைகொண்டானில் தனியார் நிறுவன ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார்.

Update: 2022-10-31 18:45 GMT

கயத்தாறு:

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 33). இவர் கங்கைகொண்டன் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தற்போது சங்கர் நகரில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று அந்தோணி வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென உடல் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் மற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்தோணி இறந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்