மின்சார பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னை தரமணியில் மின்சார பெட்டி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தரமணி ராஜாஜி தெருவில் உள்ள சிறிய அளவிலான மின்சார பெட்டி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது. அரை மணி நேரத்துக்கும் மேலாக மின்சார பெட்டியில் தீப்பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் பொதுமக்களே மண்ணை அள்ளி வீசி தீயை அணைத்தனர். இது தொடர்பாக அந்த பகுதி மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வந்து பழுது பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் இ்ல்லாமல் அப்பகுதி மக்கள் அவதி அடைந்தனர்.