எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென எரிந்ததால் பரபரப்பு
வாணியம்பாடியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஷிகிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் எர்ஸான், இவர் டீக்கடை நடத்தி வருகிறார்
இவரது எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அவரது வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது இதைக் கண்டு அலறி அடித்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் வெளியே வந்தனர்.
பின்னர் அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால் அதற்குள் ஸ்கூட்டர் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.