கிராமசபை கூட்டத்தில் தீக்குளிக்க முயற்சி

நாட்டறம்பள்ளி அருகே பன்றி வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-02 12:24 GMT

பன்றி வளர்ப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஏரிக்கொடி பகுதியை சேர்ந்த 3 பேர் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பழைய சாதம், ஓட்டல் கழிவுகள் ஆகிவற்றை கொண்டு வந்து பன்றிக்கு உணவாக வைப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், எனவே பன்றி வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலமுறை புகார் அளித்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெலக்கல்நத்தம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இ்தில் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது வீட்டின் அருகே ஒருவர் பன்றி வளர்க்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தார்.

தீக்குளிக்க முயற்சி

அதன் பிறகு மாரியப்பன் திடீரென மறைத்து வைத்திருந்த டீசலை உடல்மீது ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நாட்டறம்பள்ளி போலீசார் டீசல் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றி சமாதானப்படுத்தினர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் சிவன் தலைமையில் வருவாய் துறையினர் சம்பவம் இடத்திற்கு சென்றனர். அப்போது பன்றி வளர்த்து வந்தவரை கிராம சபை கூட்டத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலைக்குள் பன்றிகளை அங்கிருந்து காலி செய்ய கால அவகாசம் வழங்கினர்.

இந்த சம்பவத்தால் கிராமசபைகூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்