'இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது' - வைகோ பேட்டி

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. அணி வெற்றி பெற முடியாது என்று வைகோ தெரிவித்தார்.

Update: 2023-06-21 15:21 GMT

சென்னை,

மத்திய மந்திரிகள் எத்தனை முறை வந்தாலும், தமிழகத்தில் அரசியல் ரீதியாக பா.ஜ.க. வெற்றி பெற முடியாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"பிரதமர் மோடி மீண்டும் வரமுடியாத அளவிற்கு ஒரு சூழல் அரசியலில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. அவர்கள் கண்டிப்பாக தோற்ப்பார்கள். இந்தியா முழுவதும் எதிர்ப்பு அலை உருவாகி வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டிலும் கடும் எதிர்ப்பு அலை உள்ளது. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. அணி வெற்றி பெற முடியாது. இந்தியா முழுவதும் அது எதிரொலிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்."

இவ்வாறு வைகோ தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்