கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும்
கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும்
மயிலாடுதுறையில் போலீசாருக்கான மளிகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும் வகையில் புதிய கேண்டீன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கி, புதிய போலீஸ் கேண்டினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து குத்து விளக்கு ஏற்றி வைத்த அவர், முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் போக்குவரத்து போலீசாருக்கான புதிய கட்டிடத்தை டி.ஜி.பி. திறந்து வைத்தார். இதையடுத்து மயிலாடுதுறையில் இருந்து புதிதாக தொடங்கப்பட்ட செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் புதிய போலீஸ் கேண்டின்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறையில் விரைவில் ஆயுதப்படை, மாவட்ட போலீஸ் அலுவலகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை நகரில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் திறக்க பரிசீலிக்கப்படும் என்றார். விழாவில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.