வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள பாம்பு

வீட்டிற்குள் புகுந்த 8 அடி நீள பாம்பு

Update: 2022-09-13 17:34 GMT

தொண்டி

திருவாடானை சமத்துவபுரத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் அருகில் பழுதடைந்த வீடு ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வீட்டிற்குள் பாம்பு ஒன்று செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி பணியாளர் இதுகுறித்து அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். உடனே பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு மாணிக்கம் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் பதுங்கி இருந்த சுமார் 8 அடி நீள பாம்பை உயிருடன் பிடித்து அந்த பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் விட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்