செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி வெள்ளி விழா

ராமநாதபுரம்செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி வெள்ளி விழா நடந்தது.

Update: 2023-03-11 18:45 GMT

ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு ஆண்டு விழா கல்லூரி அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர் ராசிகா சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. எந்திரவியல் துறைத்தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பெரியசாமி ஆண்டறிக்கை வாசித்தார். இதனைத்தொடர்ந்து கணினித்துறையைச் சேர்ந்த கார்த்திகேயன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விக்னேஷ் பரமசிவம் கல்வி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில் அவர் பேசும் போது, மாணவ, மாணவிகள் உயர்ந்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் கல்வி கற்கவோ அல்லது வேலைக்காகவோ எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த சூழ்நிலைக் கேற்றவாறு உங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். வெற்றி என்பது பணத்தையோ அல்லது பதவியையோ குறிப்பது அல்ல. நம்முடைய நற்பண்புகளை இறுதிவரை கடைபிடிப்பதில் தான் உள்ளது என்றார்.

மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை தலைவர் மகேந்தரன் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் விவரத்தை அறிவித்தார். விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் குறித்த விவரங்களை கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சத்தியேந்திரன் அறிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில் கல்லூரி தாளாளர்கள் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர்கள் செய்யதா, பாத்திமா, ராசிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்