அம்மைநாதர் கோவில் வருசாபிஷேக விழா

சேரன்மாதேவி அம்மைநாதர் கோவில் வருசாபிஷேக விழா நடந்தது.

Update: 2023-07-02 18:32 GMT

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி தாமிரபரணி நதிக்கரையோரம் நவகைலாயங்களில் 2-வது ஸ்தலமான (சந்திர ஸ்தலம்) ஆவுடையம்மன் சமேத அம்மைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.

இதைமுன்னிட்டு கணபதி ஹோமம், கும்ப பூஜை, சிறப்பு யாகங்கள் உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்