ஆழ்வார்திருநகரி உச்சினி மாகாளியம்மன்கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி
ஆழ்வார்திருநகரி உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி குண்டு தெருவிலுள்ள உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா வருகிற 20-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் பால்குட ஊர்வலம் நடக்கிறது. கோவிலில் அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம், அபிஷேகம் நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 11 மணி அளவில் கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.