மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சிறப்பான கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மயிலாடுதுறை,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளிடையே தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"எதிர்வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தேசிய கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. தேர்தலில் எங்களுக்கு சிறப்பான கூட்டணி அமையும். தமிழக கட்சிகளில் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தைக்கு வரும் கட்சிகள் குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும்."
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.