ஆலடி அருணா பிறந்தநாள் விழா
ஐன்ஸ்டீன் கல்லூரியில் ஆலடி அருணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆலங்குளம்:
ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரியின் நிறுவனர் ஆலடி அருணாவின் 91-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் பேராசிரியர் எழில்வாணன் தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார். விழாவின் தொடக்கத்தில் மூன்றாம் ஆண்டு மாணவி சந்தியா வரவேற்றார்.
விழாவில் தமிழர் வரலாறு, மாநில சுயாட்சி, சமூக நீதி, தமிழ்நாடு விடுதலைப் போராட்ட வீரர்கள், தேவாரம், திருவாசகத்தில் இலக்கிய பொலிவு, கீழடியில் தமிழனின் காலடி மற்றும் ஆதித்தமிழனின் ஆதிச்சநல்லூர் ஆகிய தலைப்புகளில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் வினாடி- வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து ஆலடி அருணா கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் மதிவாணன் சிறப்புரையாற்றினார். அவர் தமிழ் மொழியின் பெருமையைப் பற்றி எடுத்துரைத்தார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 3-வது பரிசாக ஆயிரமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வணிகவியல் துறை தலைவர் பேராசிரியர் கயல்விழி, ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் மற்றும் துணை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.