அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தாந்தோன்றிமலையில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் 70 வயது முதிர்ந்த ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், கிராம உதவியாளருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் சாமுவேல் சுந்தரபாண்டியன், செயலாளர் மோகன் குமார் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.