"தேசிய அளவிலான தேர்வுகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இருக்க வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி.

தேசிய அளவிலான தேர்வுகளில் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டார்.

Update: 2022-10-07 22:06 GMT

மதுரை,

மதுரை திருமங்கலத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சு.வெங்கடேசன் எம்.பி., தேசிய அளவிலான தேர்வுகளில் கேள்விகள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் தேசிய அளவிலான தேர்வுகளில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் வினாத்தாள்கள் இருப்பதால், இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக சு.வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்