பேராவூரணியில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்

பேராவூரணியில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என ரெயில் பயனாளிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-04-08 19:06 GMT

பேராவூரணி:

பேராவூரணி வட்ட ரெயில் பயனாளிகள் சங்கத்தின் தலைவர் மெஞ்ஞானமூர்த்தி மற்றும் நிர்வாகிகள், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரெயில், (எண்.20683), செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரெயில் (எண்.20684), செகந்திராபாத் - ராமேஸ்வரம் விரைவு ரெயில் (எண்.07696), ராமேஸ்வரம் - செகந்திராபாத் விரைவு ரெயில் (எண்.07695) ஆகிய விரைவு ரெயில்கள் பேராவூரணி வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் பட்டுக்கோட்டை, அறந்தாங்கியில் நிறுத்தப்படுகிறது. இடையில் உள்ள முக்கிய சந்திப்பான பேராவூரணி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. இதன் காரணமாக பேராவூரணியில் இருந்து பயணிக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் சிரமம் அடைகின்றனர். இதனால் 30 கி.மீ. தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ரெயில் நிலையங்களுக்கு சென்றே பயணிக்கும் நிலை உள்ளது. முன்பு விரைவு ரெயில்கள் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று சென்றது. அதனை கருத்தில் கொண்டு, அனைத்து விரைவு ரெயில்களும் பேராவூரணி ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்