காவிரி நீரை பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் துரைமுருகன்

தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய செயல்களை மாநில அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-12 17:15 GMT

சென்னை,

காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது;

சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி காவிரி நீரை பெற தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா தெரிவித்துள்ளதை தமிழகம் ஏற்காது.

கர்நாடக அணைகளில் இருந்து 15 நாளுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. குடிநீர் தேவை என்ற போர்வையில் கர்நாடகா காவிரியில் நீர் திறக்க மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.

தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய செயல்களை மாநில அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்