விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த பாசிமணிகள்

விஜயகரிசல்குளம் அகழாய்வில் பாசிமணிகள் கிடைத்தன.

Update: 2023-08-21 18:56 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொம்மையின் இடது கை பகுதி சேதமடைந்து நிலையில் கிடைத்துள்ளன. பொம்மையின் இடது கை பகுதியை பார்க்கும் போது நம் முன்னோர்கள் கலை நயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதை அறிய முடிகிறது. மேலும் சிவப்பு, ஊதா, வெள்ளை உள்ளிட்ட பல நிறங்களில் பாசிமணிகளும் ஏராளமாக கிடைத்துள்ளன. இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்