கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை

அருப்புக்கோட்டையில் கண்மாயை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகள் கண்மாயின் நீர் மாசடையும் நிலை உள்ளதால் இதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-05 18:45 GMT

அருப்புக்கோட்டை,

கண்மாய்

அருப்புக்கோட்டை சின்னபுளியம்பட்டியில் இருந்து நெசவாளர் காலனி செல்லும் வழியில் செவல் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் புளியம்பட்டி, மணி நகரம், வீரலட்சுமி நகர், அன்பு நகர் பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. மேலும் அப்பகுதி மக்களின் விவசாய தேவைக்காகவும் இந்த கண்மாய் நீர் பயன்படுகிறது.

கோரிக்கை

தற்போது இந்த கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரைகள் சூழ்ந்து கழிவு நீர் கலந்து வருகிறது. ஒரு சில இடங்களில் கண்மாய் கரையோரம் ஆக்கிரமிப்பும் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இந்த கண்மாயை சுற்றி குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இந்த கண்மாய் மிகவும் மாசடைந்து வருகிறது. எனவே இந்த கண்மாயை தூர்வார வேண்டுமென சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்