ஏ.ஐ.டி.யு.சி. பேரவை கூட்டம்
கோவில்பட்டியில் ஏ.ஐ.டி.யு.சி. பேரவை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூத்துக்குடி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி. பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டசெயலாளர் கரும்பன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சுப்பராயன் எம்.பி. கலந்து கொண்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஏ.ஐ.டி.யு.சி. செயல்பாடுகள் குறித்து பேசினார்.
கூட்டத்தில் தாலுகா செயலாளர் பாபு, நகர செயலாளர் சரோஜா, மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசி விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏ.ஐ.டி.யு.சி.யினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.