புதிதாக 24 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு
24 இடங்களில் புதிதாக காற்று தர கண்காணிப்பு நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 34 இடங்களில் தொடர் காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் மேலும் 24 இடங்களில் இது போன்ற கண்காணிப்பு நிலையங்களை அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்குடி, கும்பகோணம் உள்ளிட்ட 24 இடங்களில் இந்த காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் மூலம் நிகழ் நேரத்தில் காற்றி தரத்தை ஆய்வு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.