விநாயகர் கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 2 பேர் கைது
சூளகிரி அருகே விநாயகர் கோவிலில் ஐம்பொன் சிலை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூளகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், பேரிகை சாலை கே.கே.நகர் பகுதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக ராதம்மா என்பவர் உள்ளார். இந்த கோவிலில் இருந்த 20 கிலோ எடை கொண்ட 1½ அடி உயர ஐம்பொன் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து கோவில் பூசாரி சூளகிரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சூளகிரியில் இருந்து உத்தனப்பள்ளி செல்லும் சாலையில் சென்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்த ஐயூம் கான் (வயது21), நைசும் (21) என்பதும், இவர்கள், சூளகிரி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும், விநாயகர் சிலையை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து சாமி சிலையை மீட்டனர்.