எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம்

எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-16 17:55 GMT

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து மாநில அளவிலான எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் குறித்த தகவல்களை வீதிநாடகம், கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு கிராமிய கலை பிரசார பயண வாகன தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கி விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசார வாகனம் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கரகாட்டம், ஒயிலாட்டம், பொம்மலாட்டம், நாடகம் மூலம் பொதுமக்களுக்கு எய்ட்ஸ் தடுப்பு குறித்து 10 நாட்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியின் போது கரகாட்ட கலைஞர்கள் கரகம் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

Tags:    

மேலும் செய்திகள்