பருத்தி சாகுபடி செய்த விளைநிலங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

கொள்ளிடம் பகுதியில் பருத்தி சாகுபடி செய்த விளைநிலங்களில் வேளாண் அதிகாரி ஆய்வு

Update: 2023-06-14 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் பருத்தி சாகுபடி செய்த விளை நிலங்களில், கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில் ராஜா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சுமார் 1300 எக்டர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி மேற்கொண்டுள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பருத்தி செடியில் மாவு பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் பருத்தி சாகுபடி செய்த விளைநிலங்களில் புல் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.மேலும் உயர்ந்த பருத்தி செடிகளை முலையில் கிள்ளி விட வேண்டும். பருத்தி செடியில் அதிக காய்ச்சல் கொடுக்காமல் ஈரப்பதம் இருக்கும் வகையில் தண்ணீர் வைக்க வேண்டும். ஒரு சில இடங்களில் மாவு பூச்சிகள் தென்படுகிறது. அதனை கட்டுப்படுத்த டைமீக்டோஏட் 30 ஈஸி என்ற மருந்தினை ஏக்கருக்கு 400 மில்லி வீதம் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்ப எண்ணெய் 22 சதவீதம் மற்றும் வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என்றார். இந்த ஆய்வில் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்