விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-16 19:17 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் பூங்கோதை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது விவசாய தொழிலாளர்களுக்கான தனித்துறையை உருவாக்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டாவும் வீடு கட்ட ரூ. 5 லட்சம் நிதி வழங்க வேண்டும். பல மாதங்களாக 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு ஊதிய நிலுவை பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்