திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்

சீர்காழி அருகே திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-29 18:45 GMT

திருவெண்காடு:

சீர்காழி அருகே திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண்மை விரிவாக்க மையம்

சீர்காழி அருகே தென்னலகுடி கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மையம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிதாக கட்ட 2020-ம் ஆண்டு அப்போதைய அரசு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.இதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி சில மாதங்கள் ஆகியும் இன்றும் திறக்கப்படாமல் உள்ளது.

இடுபொருட்கள்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்னலகுடி வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலம் காரைமேடு, நாங்கூர், செம்பதனிருப்பு, காத்திருப்பு, கீழ சட்டநாதபுரம் மற்றும் திருவாளி கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.இந்த மையத்தின் மூலம் விதை நெல், மருந்துகள் உள்ளிட்ட இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

நடவடிக்கை

இந்த மையத்தில் வேளாண் உதவி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு நிலை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பருவமழை தொடங்க உள்ள நிலையில், தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் வேளாண் விரிவாக மையத்தை புதிய கட்டிடத்தில் மாற்றம் செய்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்