பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் ரத்து

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.;

Update: 2022-12-13 18:42 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நாளை (வியாழக்கிழமை) முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், டாஸ்மாக் சில்லறை விற்பனை பிரிவு தாசில்தார் மதிவாணன், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் ஜோதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் போராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் 2 மாதங்களுக்குள் பழையஜெயங்கொண்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை நடைபெற இருந்த டாஸ்மாக் கடையை முற்றுகையிடும் போராட்டம் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்