காரில் வேகமாக சென்றதை தட்டி கேட்டதால்ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல்

போடி அருகே காரில் வேகமாக சென்றதை தட்டி கேட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மீது தாக்குதல் நடந்தது.

Update: 2023-05-21 18:45 GMT

போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகுமலை (வயது 29). நேற்று இவர், தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக சென்றது. இதைக்கண்ட அந்த பகுதியை சேர்ந்த மலைச்சாமி, அழகுமலை ஆகிய இருவரும் காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் ஏன் இவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்று தட்டி கேட்டனர்.

அப்போது காரில் வந்தவர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கருப்பையா, அவரது மனைவி இந்திரா ஆகியோரும் அங்கு வந்தனர். அப்போது காரில் வந்த 2 பேர் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அழகுமலையின் தலையில் தாக்கினர். மேலும் அவரது பெற்றோரையும் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த அழகுமலை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகுமலை உள்பட 3 பேரை தாக்கியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்