மல்லிகை பூ விளைச்சல் பாதிப்பு

அருப்புக்கோட்டையில் பெய்த தொடர்மழையினால் மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் விலை ஆயிரத்தை தாண்டியது.

Update: 2022-08-02 20:50 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டையில் பெய்த தொடர்மழையினால் மல்லிகை பூ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து குறைவால் விலை ஆயிரத்தை தாண்டியது.

மல்லிகை சாகுபடி

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி, குறிஞ்சாங்குளம், பொய்யாங்குளம் தொட்டியங்குளம், செம்பட்டி, புலியூரான் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மல்லிைக பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் மல்லிகை பூக்கள் மதுரை, நாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது.

நோய் தாக்குதல்

தொடர்மழையின் காரணமாக மல்லிகை விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2 மாதங்களாக மல்லிகை செடியில் புதுவிதமான நோய் தாக்கி பூக்கள் சரியாக மலரவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பாளையம்பட்டியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஆனி, ஆடி மாதத்தில் வீசும் ஒருவகையான காற்று காரணமாக மல்லிகை செடிகளில் மஞ்சள் மைத் எனப்படும் நோய் தாக்குகிறது.

விலை அதிகரிக்கும்

கடந்த சில நாட்களுக்கு முன் விலை குறைவாக விற்கப்பட்ட மல்லிகை பூ தற்போது விளைச்சல் குறைந்ததால் கிலோ ரூ.1,000 வரை விற்கப்படுகிறது. இன்று ஆடிப்பெருக்கையொட்டி இன்னும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி மாதம் பூக்கள் நல்ல விற்பனை ஆகும். இந்த காலக்கட்டத்தில் மல்லிகை பூ விளைச்சல் இல்லாதது எங்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது. வரத்து குறைவால் தற்போது விலை ஆயிரத்தை தாண்டியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்