வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி போலீசார் அத்துமீறி நுழைந்து வக்கீல்கள் மீது தாக்குதல் நடத்தி, வக்கீல்களின் அலுவலகம் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். இதனை கண்டித்து அந்த தினத்தை ஆண்டுதோறும் வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்றே வக்கீல்கள் கருப்பு தினமாக அனுசரித்து அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறையில் உள்ள கோர்ட்டுகளில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பணிகள் பாதிக்கப்பட்டன.