வாழையை தாக்கும் நோய்களை குறைப்பது குறித்து ஆலோசனை

வாழையை தாக்கும் நோய்களை குறைப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

Update: 2023-03-09 19:00 GMT

தோகைமலை அருகே உள்ள புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக வாழையில் தாக்கும் நோய்களை குறைப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை நடைபெற்றது. இதற்கு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானியும், தலைவருமான திரவியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் பயிர் நோயியல் முதன்மை விஞ்ஞானி தங்கவேலு கலந்து கொண்டு பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் காற்று, பனி, ஈரப்பதம் ஆகியவற்றின் காரணமாக வாழையில் மஞ்சள் இலைப்புள்ளி நோயானது பரவுகிறது. இதனால் மகசூல் குறைந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே நோயினை குறைக்க உயிரி பூஞ்சாண கூட்டுக் கலவையை வாழை நடவு செய்த 4 மாதத்தில் இருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை ஒரு லிட்டருக்கு 50 கிராம் என்ற அளவில் ஒட்டும் பசையுடன் கலந்து 5 முறை தெளிக்க வேண்டும்.

இந்த கூட்டு கலவையினை விவசாயிகள் தாங்களே எளிய முறையில் தயாரிக்கலாம் என்றும் செயல் முறை விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது. இதில், வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழ்ச்செல்வி, விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்