ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது தொடர்பாக ஆலோசனை

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-08-01 19:40 GMT

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம், அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் நேற்று நடந்தது. பெரம்பலூரில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவும், அரியலூரில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் ரமணசரஸ்வதியும் தலைமை தாங்கினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்திட முடியும். மேலும் ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம்பெறுவதை தடுத்திட முடியும்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இருப்பிடத்திலேயே பதிவேற்றம் செய்ய https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது வோட்டர் ஹெல்ப் லைன் என்ற செயலி மூலமாகவும் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீட்டிற்கு கொண்டு வரும் படிவம் 6 பி படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் ஆதார் அட்டையின் நகலினை தாக்கல் செய்வதன் வாயிலாகவும் இணைத்து கொள்ளலாம். மேலும், சிறப்பு முகாம் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் படிவம் 6 பி படிவத்தை அளித்து ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம். இப்பணியை மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக ஆய்விற்கு வரும்போது பூர்த்தி செய்யப்பட்ட 6 பி படிவத்துடன் இப்பணியினை விரைவாக முடித்திட ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்