மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Update: 2023-06-26 05:58 GMT

சென்னை,

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவார்கள்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் நிதித்துறை, வருவாய்த்துறை, சமூகநலத்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்