புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவை கண்டித்து புதுக்கோட்டையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து புதுக்கோட்டையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து மனித சங்கிலி போராட்டத்தையும் அ.தி.மு.க.வினர் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.