விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

விலைவாசி உயர்வை கண்டித்து அரியலூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-20 18:30 GMT

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், தக்காளி, வெங்காயம், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லங்குறிச்சி பாஸ்கர் உள்பட அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்