எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொண்டாட்டம்
எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து கொண்டாடினார்கள்.;
சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்த விவகாரத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. இதனை நெல்லையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அங்கும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி ெசயலாளர் வக்கீல் ஜெனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.