நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு வருகிற 10, 11-ந்தேதி நேர்காணல்
விருப்ப மனு அளித்தவர்கள் அசல் கட்டண ரசீதுடன், குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் தலைமைக் கழகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 10.03.2024 - ஞாயிற்றுக்கிழமை, 11.03.2024 திங்கட் கிழமை ஆகிய இரண்டு நாட்கள், பின்வருமாறு நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
10.03.2024 - ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு, 1. திருவள்ளூர் (தனி) (1), 2. சென்னை வடக்கு (2), 3. சென்னை தெற்கு (3), 4. மத்திய சென்னை (4), 5. ஶ்ரீபெரும்புதூர் (5), 6. காஞ்சிபுரம் (தனி) (6), 7. அரக்கோணம் (7), 8. வேலூர் (8), 9. கிருஷ்ணகிரி (9), 10. தருமபுரி (10)
பிற்பகல் 2 மணிக்கு, 1. திருவண்ணாமலை (11), 2. ஆரணி (12), 3. விழுப்புரம் (தனி) (13), 4. கள்ளக்குறிச்சி (14), 5. சேலம் (15), 6. நாமக்கல் (16), 7. ஈரோடு (17), 8. திருப்பூர் (18), 9. நீலகிரி (தனி) (19), 10. கோயம்புத்தூர் (20)
11.03.2024 - திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, 1. பொள்ளாச்சி (21), 2. திண்டுக்கல் (22), 3. கரூர் (23), 4. திருச்சிராப்பள்ளி (24), 5. பெரம்பலூர் (25), 6. கடலூர் (26), 7. சிதம்பரம் (தனி) (27), 8. மயிலாடுதுறை (28), 9. நாகப்பட்டினம் (தனி) (29), 10. தஞ்சாவூர் (30)
பிற்பகல் 2 மணிக்கு 1. சிவகங்கை (31), மதுரை (32), 3. தேனி (33), விருதுநகர் (34), ராமநாதபுரம் (35), தூத்துக்குடி (36), 7. தென்காசி (தனி) (37), 8. திருநெல்வேலி (38), 9. கன்னியாகுமரி (39), புதுச்சேரி (40)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாகப் போட்டியிட தங்களுக்கு வாய்ப்பு வேண்டியும்; கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்காகவும் விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள் அனைவரும், தவறாமல் விருப்ப மனு பெற்றதற்கான அசல் கட்டண ரசீதுடன், மேற்கண்ட கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமியின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.