போதை மாத்திரை விற்றதாக அ.தி.மு.க. பிரமுகர் கைது:கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினா்கள் தர்ணா

போதை மாத்திரை விற்றதாக அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்ட்டார். அவரை விடுவிக்ககூறி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினா்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-04 18:50 GMT

கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மகேந்திரன் (வயது 37). இவர் கரூர் மத்திய நகர அ.தி.மு.க. பாசறை செயலாளராக உள்ளார். இந்நிலையில் தாந்தோணிமலை, கணபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மகேந்திரன் போதை மாத்திரை விற்றதாக நேற்று பசுபதிபாளையம் போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். இதையடுத்து மகேந்திரன் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், எனவே அவரை விடுவிக்கக்கோரியும், மகேந்திரனின் மனைவி ரம்யா, தாய் அமுதா மற்றும் உறவினா்கள் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது கோஷமும் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்